குடும்பங்களை பிரிக்கவில்லை, எனது அதிரடி நடவடிக்கைகள் தொடரும்! ரஞ்சன் எம்.பி

Report Print Steephen Steephen in அரசியல்

தனது குரல் பதிவு வெளியாகியதால், எவருடைய குடும்ப வாழ்க்கை மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

குடும்ப வாழ்க்கையை கலைக்கவோ, தனிப்பட்ட வாழ்க்கையை அழிக்கவோ தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தொலைபேசி உரையாடல்களை எந்த வகையிலும் நிறுத்த போவதில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.