நாடாளுமன்றம் 2 ஆம் திகதி கலைக்கப்படுகிறது

Report Print Steephen Steephen in அரசியல்

எட்டாவது நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட் கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலைக்க உள்ளார். இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் தற்காலிக அரசாங்கம் செயற்பட உள்ளது.

பொறுப்பு அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு மாத்திரமே அதிகாரம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் இரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.