தாமரை மொட்டுச்சின்னத்தில் போட்டியிடும் ரோஹன விஜேவீரவின் புதல்வர்!

Report Print Steephen Steephen in அரசியல்
148Shares

மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரியவருகின்றது.

உவிந்து விஜேவீர இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு ஜனாதிபதியும்,பிரதமரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் உவிந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது. அவரது தந்தையின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு உவிந்து விருப்பம் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான இந்த சந்திப்பில் ரோஹன விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி விஜேவீரவும் கலந்துக்கொண்டுள்ளார்.