ரணிலின் உலங்குவானுர்தி பயன்பாட்டிற்காக செலுத்தப்படவுள்ள 18 லட்சம் ரூபாய் பணம்!

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் இருந்த அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் பயன்படுத்திய விமானப் படையின் உலங்குவானூர்திகளுக்காக 18 லட்சத்து 55 ஆயிரம் 944 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாக தெரியவருகிறது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பயன்படுத்திய உலங்குவானூர்திகளுக்காக 13 லட்சத்து 14 ஆயிரத்து 166 ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது.

பிரதமர் அலுவலகம் பயன்படுத்திய உலங்குவானூர்திகளுக்காக 5 லட்சத்து 41 ஆயிரத்து 778 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.