குமார வெல்கம கட்சி தொடங்கினால் சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்: தயாசிறி

Report Print Steephen Steephen in அரசியல்
30Shares

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, புதிய கட்சியை ஆரம்பித்தால், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு சென்றதாக கருதி கட்சியில் இருந்து நீக்க போவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குமார வெல்கம கூறுவது போல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எவரும் வெறுப்படைந்து காணப்படவில்லை எனவும் பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியில் இணைந்து அனைவரும் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் புதிய கூட்டணியில் இணைத்துக்கொள்ள உள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.