இலங்கை பிச்சையெடுக்கும் நிலைக்கு செல்லும்: ரணில் ஆரூடம்

Report Print Ajith Ajith in அரசியல்
264Shares

இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படப் போகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதுஅவர் இதனை குறிப்பிட்டார். பொருளாதாரத்தை முகாமைப்படுத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது.

கடந்த காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தை விமர்சித்து வந்த கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்கொண்டது .

எனினும் முன்னர் அரசாங்கம் மீது முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இலங்கையை பிச்சைக்கார நாடாக மாறிவிடக்கூடாது என்று ரணில் குறிப்பிட்டார். இது இலங்கையின் மதிப்பை குறைத்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.