சின்னம் குறித்து ரணில், சஜித் தரப்பு இன்று சந்திப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

ஏப்ரல் மாதம் 25ம் திகதியன்று நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் பொதுத்தேர்தலின் போது எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று ஐக்கிய தேசிய சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் முடிவெடுக்கவுள்ளன.

ஏற்கனவே பல தடவைகளாக இது தொடர்பில் சந்திப்புக்கள் இடம்பெற்றபோதும் அதில் இணக்கங்கள் எட்டப்படவில்லை.

இந்நிலையில் கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். இதன்போது பெரும்பாலும் அன்னம் சின்னத்திலேயே போட்டியிடலாம் என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனினும் ஆங்கில செய்தித்தாள் ஒன்றின்படி இன்னும் யானை சின்னத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியை போட்டியிட செய்வதற்கான முனைப்புக்கள் ரணில் விக்ரமசிங்க தரப்பினரால் மேற்கொள்ளப்பபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது