மனித உரிமைகள் பேரவையின் 43வது அமர்வில் பங்கேற்ற இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40-1 யோசனையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக்கொள்ளும் அறிவிப்பை அமைச்சர் அமர்வின் போது வெளியிட்டிருந்தார்.
அத்துடன் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் உள்ளக ஆணைக்குழு ஒன்றை அமைப்பது குறித்தும் அவர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
எனினும் இந்த இரண்டு விடயங்களும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட்டை கடந்த 28ம் திகதியன்று சந்தித்து இலங்கையின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்ந்தும் தமது பணிகளை முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.