ஐ.தே.கட்சியின் மோதல் முடிவுக்கு வரப் போவதில்லை - ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்
25Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடுகளை அந்த கட்சியினர் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எண்ணிக்கை முக்கியமல்ல, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எமக்கு 10 முதல் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், எப்படி 225 பேரை நெறிப்படுத்துவது என்பது எமக்கு தெரியும். அரசாங்கத்தை அடக்கி வைக்கும் பலத்தை எமக்கு தாருங்கள். பலமான எதிர்க்கட்சியின் பங்களிப்பை செய்வதற்கான அதிகாரத்தை எமக்கு தாருங்கள்.

எதிர்க்கட்சியின் கடமையை செய்ய ஐக்கிய தேசியக் கட்சியால் முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினர் இரண்டாக பிரிந்து மோதிக்கொள்கின்றனர். இரண்டு அணிகளும் சின்னத்திற்கு போட்டி போடுகின்றன.

சின்னம் அல்ல பிரச்சினை, அவர்களிடம் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன. ஓரளவுக்கு ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் அந்த மோதல் முடிவுக்கு வரப்போவதில்லை. தேர்தலுக்கு பின்னரும் நீடிக்கும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.