கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனுக்கு இடமில்லை!

Report Print Ajith Ajith in அரசியல்
157Shares

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனுக்கு இடமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது

எனவே அதற்குள் சுரேன் ராகவனை இணைத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேன் ராகவன் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.