பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம்!

Report Print Ajith Ajith in அரசியல்
321Shares

தேர்தல் காலமாக இருந்தாலும் கூட இலங்கையின் பொதுநிர்வாக அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் வெளியிட்டுள்ளது

இதனையடுத்து குறித்த நியமனக்கடிதங்களை முடியுமான அளவு விரைவில் உரியவர்களுக்கு சேர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் தெளிவாக்கலை பெற்ற பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 15 ஆயிரம் பேருக்கு நியமனங்கள் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையிலேயே ஏனையவர்களுக்கு இந்த தேர்தல் காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்