இலங்கைக்கான நிலுவை தொகையை அதிகரித்துள்ள சீனா நிறுவனம்

Report Print Ajith Ajith in அரசியல்
162Shares

கடன்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கான நிலுவைகளை ஏற்கனவே செலுத்தவேண்டியுள்ள அரசாங்கத்துக்கு மேலும் ஒரு நிலுவைத் தொகையை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

சீனாவின் நிறுவனம் ஒன்றே இந்த நிலுவைக்கோரிக்கையை விடுத்துள்ளது.

நோர்தன் ஸ்டார் கொன்சல்டிங் கோப்பரேசன் லிமிட்டெட் என்று நிறுவனமே இந்தக்கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.

தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் 715 ஆயிரம் டொலர்களை செலுத்துமாறு அந்தநிறுவனம் கேட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையிலான உறவைப்பலத்தும் வகையில் ஆலோசனை சேவையை இந்த நிறுவனம் வழங்கி வந்தது.

இதற்காக அந்த நிறுவனத்துக்கு மாதம் ஒன்றுக்கு 65ஆயிரம் டொலர்கள் செலுத்தப்படடு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.