அரசியலுக்கு வரும் பிரதமரின் மற்றுமொரு புதல்வர்

Report Print Steephen Steephen in அரசியல்
302Shares

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான கடற்படை லெப்டினட் கமாண்டர் யோஷித்த ராஜபக்ச அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட உள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது உரிமையை கிழக்கு மாகாணத்தில் உறுதிப்படுத்துவதற்காக ராஜபக்ச குடும்பத்தினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

யோஷித்த ராஜபக்சவின் மனைவி நீதிஷா, மீடியா பெக்டரி என்ற விளம்பர விநியோக நிறுவனத்தின் மீடியா செடுலிங் நிறுவனத்தை கொள்வனவு செய்திருந்தார். அரசியல் பிரசார நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்யவே இந்த நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ச ஒரு முறை விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச நாமல் ராஜபக்ச, நிருபமா ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே அரசியலில் இருந்து வருகின்றனர். யோஷித்த ராஜபக்சவின் வருகையுடன் அரசியலில் ஈடுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கும்.