மொட்டுக்கட்சியில் இணையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தியால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை வழங்க கட்சி இணங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாவின்ன, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து செயற்பட்டு வந்தார்.