நாட்டில் மிகவும் தீவிரமாக பௌத்த மதத்தினர் அந்நிய மதங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக பிரதமரும் பௌத்த மற்றும் கலாசார விவகார அமைச்சருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலியில் விகாரை ஒன்றில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நாட்டுக்குள் பல வழிகளில் மிகவும் தீவிரமாக மத மாற்றங்கள் நடப்பது எமக்கு தெரியும். பௌத்த மக்கள் அந்த அலையில் சிக்கியுள்ளதை நாம் அறிவோம்.
இதனால், இவை குறித்து பௌத்த சங்க சபையினரும், அதேபோல் மக்களும் புரிந்துணர்வுடன் கிராமத்தில் மத மாற்றம் செய்யப்படுவது தொடர்பாக கண்ணை திறந்து அவதானித்து கொண்டிருப்பது நல்லது என நம்புகிறேன்.
இவை குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.