நாடு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது - ரணில் விக்ரமசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்
99Shares

விரிவான கூட்டணியாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட போவதை அறிவிப்பதற்காக மங்கள சமரவீர இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,

நாடும், மக்களும் சிரமங்களுக்கு உள்ளான அனைத்து சந்தர்ப்பங்களில் நாட்டை காப்பாற்ற ஐக்கிய தேசியக் கட்சியே முன்னுக்கு வந்தது. நாடு தற்போதும் அப்படியான நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை அந்த நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க விரிவான கூட்டணியாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்.

தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தின் தூரநோக்கற்ற முகாமைத்துவம் காரணமாக பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு சென்று பிச்சை எடுக்க நேரிட்டது. இப்படி பிச்சை எடுப்பது சிங்களத்தனமா?. இப்படி உலகத்திற்கு மத்தியில் தரம் தாழ்ந்து போகாமல், பிச்சை எடுக்காது வாழ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.