ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று முற்பகல் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிப் பெற்றுக்கொண்டுள்ளார்.
தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி தியவடன நிலமே திலங்க தேல பண்டார வரவேற்றார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஜனாதிபதி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார்
இதனையடுத்து அஸ்கிரிய ஸ்ரீ சந்தானந்த பௌத்த கல்லூரியின் ரங்கிரி தம்புள்ள மஹா விகாரையின் விகாராதிபதியும் கண்டி அஸ்கிரிய மஹா விகாரையின் சிரேஷ்ட சங்க செயற்குழு உறுப்பினருமான கலாநிதி கொடகம மங்கள தேரரையும் சந்தித்துள்ளார்.