நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் தாளத்திற்கு ஆடியது: பிரசன்ன ரணதுங்க

Report Print Steephen Steephen in அரசியல்
10Shares

ஜனாதிபதி ஒரு கட்சியையும் பிரதமர் மற்றுமொரு கட்சியை சேர்ந்தவராக இருந்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இரண்டு பேரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையான அரசாங்கம் உருவாக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் நாளைய தினம் கட்டாயம் கலைக்கப்படும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.

கடந்த மூன்று மாதங்களாக இருப்பது நாங்கள் கடனாக பெற்ற அரசாங்கம். நாடாளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், எதிர்க்கட்சியின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நாங்கள் அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

2015 ஆம் ஆண்டு பொய்யான கதைகளை கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் பொய்யாலேயே அரசாங்கத்தை முன்னெடுத்து வந்தது.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. நாட்டுக்கு அழிவு மாத்திரமே ஏற்பட்டது. கடனை பெறும் தேவைக்காக நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடியது.

நல்லாட்சி அரசாங்கம் முற்றாக பொம்மை அரசாங்கம். இதன் காரணமாக ஜெனிவா யோசனையை அமுல்படுத்த நல்லாட்சி அரசாங்கம் இணங்கியது.

இந்த யோசனை யாருடைய தேவைக்காக கொண்டு வரப்பட்டது என்பதை அதற்காக குரல் கொடுப்பவர்கள் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.