ஜனாதிபதியை பிரதமர் வேலை செய்ய விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது: சீ.பீ.ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்
48Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியான முறையில் தீர்மானங்களை எடுக்கும் போது பிரதமர் மகிந்த ராஜபக்ச அதற்கு இடமளிப்பதில்லை என சிலர் கூறுவது முற்றிலும் பொய்யானது என சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தகவல்கள் மூலம் குறுகிய அரசியல் இலாபத்தை பெற எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொத்மலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செயதியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேலை செய்யவிடுவதில்லை என கருத்தை சமூகமயப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதனை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

2015 ஆம் பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்தியது போல் தற்போது அதனை செய்ய முயற்சித்து வருகின்றனர். பல்வேறு சக்திகள் வருகின்றன. பல வதந்திகளை பரப்புகின்றனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று வெற்றி பெறுவோம்.

இதனால், ஜனாதிபதி வேலை செய்யவிடுவதில்லை. காலை பிடித்து இழுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம் எனவும் சீ.பீ.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.