தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற இடமளிக்க போவதில்லை: பழனி திகாம்பரம்

Report Print Steephen Steephen in அரசியல்
37Shares

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதாக தொழிலாளர்களை ஏமாற்றி அரசியல் இலாபம் பெற எவருக்கும் எந்த தரப்பினருக்கும் இடமளிக்க போவதில்லை நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என தோட்ட நிறுவனங்கள் இதுவரை அறிவிக்கவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.

எப்போது தேர்தல் வரும் என்ற சந்தேகத்தில் நாங்கள் இருக்கின்றோம். உண்மையில் நாங்கள் இந்த மக்களுக்கு வேலைகளை செய்துள்ளோம்.

தற்போது வெப்பம் அதிகமாக இருக்கின்றது. இதனால் தேயிலை பறிக்க முடியாது. 12 கிலோ தேயிலை கொழுந்தை கூட பறிக்க முடியாது.

ஒரு கிலோ தேயிலைக்கு 50 ரூபாய் தருவதாகவும் 20 கிலோ பறித்தால் ஆயிரம் ரூபாய் தருவதாகவும் சிலர் கூறுகின்றனர். இப்படித்தான் சம்பளத்தை அதிகரிக்க போகின்றனர்.

இந்த மக்களை ஏமாற்ற இடமளிக்க மாட்டோம் என்பதை கூற விரும்புகிறோம். தேர்தல் காலத்தில் வந்து ஆயிரம் ரூபாய் தவறாக மக்களை ஏமாற்றினால், நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம்.

நிறுவனங்கள் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறவில்லை. அரசாங்கமே அவ்வாறு கூறியது. எப்படி ஆயிரம் ரூபாயை வழங்குவது.

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கினால், நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம், அதனை சீர்குலைக்க மாட்டோம் எனவும் பழகி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணனும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரித்த சம்பளத்தை துரிதமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.