மூடிய அறைக்குள் பேசியது என்ன..? சுமந்திரன் கூறும் உண்மைகள்

Report Print Sujitha Sri in அரசியல்
601Shares

மூடிய அறைக்குள்ளே நாங்கள் சில விடயங்களை அதாவது உத்திகள் தொடர்பில் பேச வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த கருத்தும், ஒருமித்த பயணமும் என்ற தொனிப்பொருளில் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழ்நிலை தொடர்பான கருத்தரங்கு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கூறுகையில்,

கட்சி கூட்டத்திற்குள், மூடிய அறைக்குள்ளே நாங்கள் சில விடயங்களை, உத்திகளை குறித்து பேச வேண்டும் என கே.ரி.கணேசலிங்கம் சொன்னார்.

ஆம் அது செய்ய வேண்டும். ஆனால் அது செய்வதற்கு முன்னதாக பொது பரப்பிலே தமிழர்கள் மத்தியில் எங்களை சாராதவர்கள், புத்தி ஜீவிகள், அரசியல் சிந்தனையாளர்கள் மத்தியிலே எப்படியான சிந்தனைகள் இருக்கின்றன என்பதை நாங்கள் முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கான ஒரு சந்தர்ப்பமாக தான் நாம் இதனை உபயோப்படுத்துகின்றோம். அதனால் நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் மிகவும் பிரயோசனமானவைகள்.

நாங்கள் எங்கள் கட்சிக் கூட்டங்களில் பேசுகின்ற போது கதவை மூடிவிட்டு பேசுகின்ற போது அந்த பேச்சுவார்த்தைக்கு பொருள் வேண்டும்.

நாங்களாக எங்களுடைய சிந்தனைகளையே வைத்துக் கொண்டு பேசுவதை தவிர்த்து எப்படியான விமர்சனம் இருக்கிறது, எங்களை சாராதவர்கள் ஏன் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கின்றார்கள், அதில் நியாயம் இருக்கிறதா என்ற விடயங்களை நாங்கள் அலசி ஆராய்ந்து அது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய கடப்பாடு இருக்கிறது என கூறியுள்ளார்.