ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு கூட்டுச்செயலாளர்களை நியமிக்க வேண்டும்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு கூட்டுச்செயலாளர்களை நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அகில விராஜ் காரியவசம் மற்றும் சஜித் பிரேமதாவின் தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியின் சார்பில் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கூட்டு பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

இதன்போதே குறித்த கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை பேண முடியும்.

இரண்டு கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமே பொதுத்தேர்தலின் சவாலை சமாளிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.