தேர்தலில் போட்டியிடும் சின்னம் மொட்டாகவே இருக்கும்! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த கட்சியின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பாகவோ அல்லது முன்னணியாக போட்டியிடுவது தொடர்பாகவோ இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எனினும் தேர்தலில் போட்டியிடும் சின்னம் மொட்டாகவே இருக்கும்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பாரிய வெற்றியை பதிவு செய்யும்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் தவிசாளர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து கருத்துரைத்த போது,

அது தனிப்பட்டவருக்கு வழங்கப்பட்ட பதவியல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்பட்ட பதவி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.