ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் நேற்று இரவு 10 மணியளவில் துபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பயணத்தின் நோக்கம் தொடர்பான விபரம் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே நேற்று காலை கட்சியின் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் மாலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் உடன்படிக்கை செய்து கொள்வதன் மூலம் தேர்தலில் ஒற்றுமையுடன் செயற்பட இணங்கியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் பிரச்சாரப்பணிகள் கரு ஜெயசூரியவின் தலைமையில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.