ஹரின், எரான், ரவிந்திர தேசிய பட்டியலில்

Report Print Steephen Steephen in அரசியல்

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாது தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வர முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலமான இளம் தலைவரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இவர்களில் அடங்குவதாக கூறப்படுகிறது.

அத்துடன் பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திர சமரவீர, கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன ஆகியோர் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக எதிர்பார்த்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் பெரும்பாலும் தேசிய பட்டியலில் தெரிவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு பொதுத் தேர்தலில் தேசிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You may like this video...