பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பெறும் - பசில் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

பல்வேறு தடைகள் ஏற்பட்ட கஷ்டமான சந்தர்ப்பத்தில் புதிய அரசியல் கட்சியாக தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியை பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெறுவது உறுதியானது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி இம்முறை தேர்தலில் 113 முதல் 120 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் பசில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதம், கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, பிரதேச மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.