ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கடும் வெறுப்பில் இருந்து வருவதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் கூறிய பருந்து கதை மற்றும் கட்சியை ஒதுக்கி வைத்து விட்டு, அவரது புகைப்படத்தை மாத்திரம் பயன்படுத்தி சகல தேசிய பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டமை என்பன இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேன போன்ற நபருடன் எந்த வகையிலும் எதிர்கால அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதானிகளிடம் மைத்திரியின் செயற்பாடுகள் குறித்து தயாசிறி மிகவும் வருத்தத்துடன் கருத்து வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.