ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் மூன்று முக்கியஸ்தர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்
199Shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் மூன்று முக்கியமானவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சாப்ரி ஆகியோரே அவர்கள் மூவரும் என தெரியவருகிறது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் தேசிய பட்டியலில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச குருநாகலில் போட்டியிடும் அதேநேரம் அவருடைய சகோதரர் சமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டையில் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால பொலன்னறுவையில் போட்டியிடவுள்ளார்.

இதற்கிடையில் வேட்பாளர்கள் தொகுதிகளை மாற்றாமல் அவர்களின் தொகுதிகளிலேயே போட்டியிட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

இந்தநிலையில் பல புதிய வேட்பாளர்கள் இந்த முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியலில் உள்ளடக்கப்படவுள்ளனர்.