பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இடம்பெற கடும் போட்டி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயர்களை உள்ளடக்கி கொள்ள பிரதான நபர்கள் பலர் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர்களில் பலர் கடந்த சில தினங்களாக பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு வந்து கட்சியின் பிரதானிகளை சந்தித்து தேசிய பட்டியவில் பெயர்களை உள்ளடக்க தமக்கு இருக்கும் தகுதிகளை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இவ்வாறு வந்து கோரிக்கை விடுத்தவர்களை தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு வருமாறும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை வழங்க முடியும் எனவும் பொதுஜன பெரமுனவின் பிரதானிகள் அறிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் பலர் நாடாளுமன்றத்திற்கு வர முயற்சித்து வந்த போதிலும் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத, படித்த, புத்திசாலிகளான தொழிசார் நிபுணர்களை இம்முறை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய பொதுஜன பெரமுனவின் பிரதானிகள் திட்டமிட்டுள்ளனர்.