அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் - தேசிய பிக்கு முன்னணி

Report Print Steephen Steephen in அரசியல்
190Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களுக்கு பெருந்தொகையான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்ததாகவும் எனினும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது கடந்த 100 நாட்களின் தோல்வியடைந்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாகவும் தேசிய பிக்கு முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வக்கமுல்லே உதித்த தேரர் இதனை கூறியுள்ளார்.

விசேடமாக நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்ய போவதில்லை என கோட்டாபய ஆட்சிக்கு வரும் போது கூறியிருந்தார். எனினும் தற்போது அந்த வாக்குறுதி ஜனாதிபதிக்கு மறந்து போயுள்ளது.

எம்.சீ.சீ உடன்படிக்கையில் கைச்சாத்திட போவதில்லை என கூறினார்கள், தற்போது அந்த உடன்படிக்கையை திருத்தங்களுடன் இரகசியமாக கையெழுத்திட முயற்சித்து வருகின்றனர். அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் போது, எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திட மக்களின் ஆணையை பெறவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

அது மாத்திரமல்ல எக்ஸா உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்வார்கள். இந்த உடன்படிக்கைகளில் இருந்து நாட்டை காப்பற்ற இருக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுதான் என்பதால், கோட்டாபயவுக்கு வாக்களியுங்கள் என கூறிய கல்வியாளர்கள், புத்தி ஜீவிகள், சமய தலைவர்கள் தற்போது அமைதியாக இருக்கின்றனர்.

கருத்தடை மாத்திரை என்று கூறி இனவாதத்தை தூண்டிய ஞானசார தேரர் கருத்தடை மாத்திரை என்று எதுவும் இல்லை என்று தற்போது கூறுகிறார்.

அதேபோல் இனவாதத்தை தூண்டிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், மெடில்லே பிரஞ்ஞான லோக்க தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர் ஆகியோர் தற்போது அமைதியாக இருக்கின்றனர். குறைந்தது இந்த பிக்குமார் பிரச்சினை தொடர்பாக அறிக்கைகளை கூட வெளியிடவில்லை.

அது மாத்திரமல்ல ரணில் தலைமையிலான கடந்த அரசாங்கம் வில்பத்து வனத்தை அழிப்பதாக கூறிய பாஹிங்கல ஆனந்த சாகர தேரரும் அமைதியாக இருக்கின்றார் என வக்கமுல்லே உதித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.