அர்ப்பணிப்புக்கு தயார்: ஐ.தே.கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆகக்கூடியளவு அர்ப்பணிப்புக்கு தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனையவர்களை ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துக்கொள்ள முன்வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அர்ப்பணிப்பின் ஒருக்கட்டமாக பொதுச்செயலாளர் பதவியையும் விட்டுக்கொடுக்க ஐக்கிய தேசியக்கட்சி தயாராகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் இணைந்துப் போட்டியிடாவிட்டால் ஆட்சி அமைப்பதற்கான 113 ஆசனங்களை பெறமுடியாது போய்விடும்.

எனவே ஐக்கிய தேசிய சக்தி தமது யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு முன்னணி ஒன்றை அமைக்க முன்வருமாறு வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.