மாவை சேனாதிராசாவுடன் சந்திப்பு நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் குழு

Report Print Sumi in அரசியல்

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது ஐ.நா. அதிகாரிகள், வடக்கு மாகாண அரசியல் நிலவரங்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னரான சிவில் நிர்வாக கட்டமைப்புகளின் செயற்பாடுகள், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் கள நிலவரங்கள் தொடர்பில் மாவை சேனாதிராசாவிடம் கேட்டறிந்துள்ளனர்.

இதேவேளை, ஐ.நா. அகதிகளுக்கான தூதரகத்தின் வதிவிடப் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர், யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவை செயலகக் கட்டட தொகுதியில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானத்தை நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.