திருகோணமலையில் இரு ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் பெறும்: எம்.எஸ்.தௌபீக்

Report Print Mubarak in அரசியல்
43Shares

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறுவது உறுதியாகியுள்ளதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

குச்சவெளியில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எனது நிதி ஒதுக்கீடுகள் மூலமும் பல்வேறு வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும், சேவைகளையும் குச்சவெளியில் மாத்திரமின்றி திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொண்டுள்ளோம்.

இன, மதம், பிரதேச வாதங்கள் பாராது எமது சேவைகளை மேற்கொண்டோம். இனி மேலும் செய்வோம். நாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக கடந்த காலங்களிலிருந்து உருவெடுத்து வருகின்றது.

இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறுவதோடு, திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெறுவது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.