பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளேன்! ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்
199Shares

நாட்டில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க ஒரு பதவி காலம் தனக்கு போதும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனது பணிகளை முன்னெடுக்க அரசியலமைப்பு தடையாக உள்ளது. அதனை மாற்றியமைக்க பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலம் வேண்டும்.

இன்று மாலை ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.

“எங்களுக்கு மாத்திரம் தடையில்லை. பொது மக்களும் தடைகளை பார்த்துள்ளனர். பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு தடை உள்ளது.

திட்டங்களின்றி மேற்கொண்ட தடைகளை நாங்கள் பார்த்துள்ளோம். நாட்டினை ஆட்சி செய்யும் போது சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளன. இந்த விடயங்களை நீக்கிக் கொள்வது முக்கியமாகும்.

நிறைவேற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசியமான விடயங்களை செய்ய முடியவில்லை என்றால் அந்த அரசியலமைப்பில் செயற்படுவது கடினம். நாட்டினை ஆட்சி செய்வது கடினம்.

தடை இல்லை என்றால் நாட்டிற்கு அவசியமான விடயங்களை மேற்கொள்வதற்கு எனக்கு ஒரு பதவிக்காலம் போதும்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.