தன்னை கைது செய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவு மைத்திரியின் சூழ்ச்சியே ! ரவி கருணாநாயக்க ஆதங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

பிணை முறி மோசடி சம்பந்தமாக தன்னை கைது செய்ய வழங்கப்பட்டுள்ள உத்தரவு சூழ்ச்சி எனவும், இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதாகவும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை கைது செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை தெளிவான அரசியல் சூழ்ச்சி.

நிதியமைச்சராக தான் பதவி வகிக்கும் போது மத்திய வங்கி உட்பட எந்த வங்கியும் தனது அமைச்சின் கீழ் இருக்கவில்லை. இதனால், பிணை முறி மோசடி சம்பந்தமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ம் ஆண்டு தான் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தனது பெயரை பொய்யாக குறிப்பிட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சுமத்தும் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.