113 இலங்கையர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை

Report Print Ajith Ajith in அரசியல்

113 இலங்கையர்களுக்கு இந்திய பிரஜாரிமை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை பிரதியமைச்சர் நித்யாநந்த் ராய் தெரிவித்துள்ளார்.

ராஜ்சபாவில் இன்று அவர் இதனை குறிப்பிட்டார்.

2014- 2019 காலப்பகுதியில் இந்த பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தில் இலங்கை அகதி தமிழர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

2014 முதல் 2019 வரை 18999 பேருக்கு இந்தியாவில் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஸில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களே அதிகமானவர்களாவர்.