சிறுபான்மை கட்சிகள் ஒருமித்து செயற்பட்டாலே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்!

Report Print Sumi in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒருமித்து செயற்பட முன்வர வேண்டும் என யாழ்ப்பாண மக்கள் பணியகத்தின் தலைவரும், யாழ்ப்பாணம் சர்வமத குழுவின் தலைவருமான மௌலவி சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மிகவும் முக்கியமான தேர்தலாகும்.

எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மேலும் இனம் சார்ந்த உரிமைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கியதான ஒரு முக்கியமான தேர்தலாகும்.

அந்த தேர்தலில் எமது சிறுபான்மையின கட்சிகள் அனைத்தும் ஒருமித்துச் செயற்பட்டாலே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

உண்மையிலேயே மக்கள் தங்களுடைய எதிர்கால வாழ்விற்கு தங்களுடைய உரிமைகள் தங்களுடைய அபிவிருத்திக்கு யார் உண்மையாகவே உழைக்கக் கூடியவர்கள், பாடக் கூடியவர்கள், அர்ப்பணிப்போடு செயல்படக்கூடியவர்கள், மக்களோடு மக்களாக நின்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய திறமை உள்ளவர்கள் என்பதை நன்கு அறிந்து, தெரிந்து தங்களுடைய வாக்குகளை தங்களுடைய விரும்பக்கூடிய வேட்பாளருக்கு தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளும் தங்களால் செய்ய முடிந்தால் மக்களுக்கு சொல்ல வேண்டும். மக்களை ஏமாற்றிய கடந்த காலங்களைப் போன்று நாங்கள் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கக்கூடாது.

உண்மையாகவே ஐந்து வருட கால கட்டத்திலே இந்த மக்களுக்காக எப்படியான சேவைகளை செய்ய முடியும் என்பதை தெளிவாக உணர்ந்து அத்தகைய உண்மை வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்க வேண்டுமே தவிர மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்ற பின் அவை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளதாகவே காணப்படுகின்றது.

எனவே மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை சரியானவர்களை தெரிவு செய்ய முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.