மொட்டால் வாக்குகள் வராதாம்! வீணையில் போட்டியிட ஈ.பி.டி.பி தீர்மானம்!

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசில் பங்காளியாக இணைந்துள்ள ஈ.பி.டி.பி., வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தனது கட்சியின் சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகின்றது.

வீணைச் சின்னத்தில் போட்டியிடும் முடிவு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதெனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் வாக்குகளை அதிகளவில் பெற முடியாது எனவும், அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதெனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈ.பி.டி.பியின் பிரமுகரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசாவிடம், ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டியிடும் தகவல் உண்மையா எனக் கேட்டபோது அவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.