அதிக ஆசனங்களை பெற்று பலமான அரசை அமைக்கும் மொட்டு! சுசில் பிரேமஜயந்த

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பலமான அரசை ஸ்தாபிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று ஊடகவியலாளர்சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியின் ஊடாகவேபோட்டியிடும். பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் 120ஆசனங்களைத் தனித்து பெற முடியும்.

கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின்ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாத ஐக்கியதேசியக் கட்சியிடம் மக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள்.

வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய நிலைமைகவலைக்குரியது.

கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அப்பால் சென்றுசெயற்படும் போது இவ்வாறான நிலைமையே தோற்றம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.