சைவ சமய மதவாத ரீதியான சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ள சிவசேனை அமைப்பு!

Report Print Thileepan Thileepan in அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்னி தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் சைவ சமய மதவாத ரீதியான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிவ சேனை என்ற அமைப்பு இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளது.

தமிழ் தேசியம் காக்க சைவ வேட்பாளருக்கு வாக்களிப்பீர் சைவ மக்களே” எனவும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளால் தமிழ் மக்கள் மத்தியில் மத ரீதியான பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.