ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடும்

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது மொட்டு சின்னத்தில் போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமது கட்சி வெற்றிப் பாதையில் பயணிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சி தரப்பு பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படுவதற்கு முனைப்பு காட்டி வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.