19வது திருத்தச்சட்டத்தை வலுவிழக்கச்செய்ய நடவடிக்கை! மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

Report Print Ajith Ajith in அரசியல்

19வது திருத்தச்சட்டத்தை வலுவிழக்கச்செய்யும் திட்டத்துக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

19வது திருத்தத்தின் மூலம் இலங்கையில் சுயாதீன நிறுவனங்கள் வலுப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை வலுவிழக்கச்செய்யும் செயற்பாடு மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் திட்டங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே அரசாங்கம் 19வது திருத்தத்தை வலுவிழக்கச்செய்யும் நோக்கத்தை கைவிடவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுள்ளது.

இதேவேளை மனித உரிமைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்கப்பட்டவேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.