சுமந்திரனின் கருத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி வழங்கிய பதில்!

Report Print Murali Murali in அரசியல்
291Shares

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை சுமந்திரன் ஏமாற்றப் பார்க்கின்றார் என தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையை சர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும்ரூபவ் ஐக்கிய நாடுகளாலும்மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி சுமந்திரன் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் பார்க்கின்றார்.

இது தவறானது. இலங்கை அரசினாலும் இலங்கையின் படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை.

இவ்வறிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்களை ஆவணப்படுத்தி உள்ளன. ஆனால் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளும் இது காறும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கைகளை சர்வதேச விசாரணையின் முடிவுகளே என்று .சுமந்திரன் சித்திரிக்கப்பார்க்கின்றார்.

இவ்வாறான செயலால் .சுமந்திரன் தமிழ் மக்களைத் தடம் மாற்ற முயன்றிருக்கின்றார். தமிழ் மக்கள் நீதியைப் பெற வேண்டுமானால் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையிலோ இலங்கைக்கான ஒரு விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு மன்றம் முன்னிலையிலோ பாரப்படுத்தப்பட்டு நீதிபாற்பட்ட விசாரணைக்குள்ளாக்கி தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் கூடிய மதிப்புடனும் தொழில்சார் மாண்புடனும் கையாளப்பட வேண்டும் சுமந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது அவற்றின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களைத் தடம்புரளச் செய்வதும் ஏமாற்றுவதுமேயாகும் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

உண்மை இதோ! – நடந்தவற்றைக் கூறி தரவுகளைச் சேகரித்திருந்தன ஐக்கிய நாடுகளின் இரு அறிக்கைகளும். எனினும் அம் முயற்சி முடிவடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதியப்படவில்லை.

தாம் குறிப்பிடும் குற்றங்களைப் புரிந்தமைக்கு யார் பொறுப்பு என்று கூறி தமது பரிந்துரைகளைப் பதியவில்லை. இறுதியாக, நீதியைப் பெறத் தாம் எடுக்கும் முயற்சிகள் ஒரு செயல்பாட்டின் முதல்ப்படியே என்று குறித்த அறிக்கைகளே ஏற்றுக் கொண்டுள்ளன.

குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் உண்மையில் கூறும் சில விடயங்கள் பின்வருமாறு

1. டாருஸ்மான் அறிக்கை எனப்படும் “இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணத்துவக்குழாமின்” 2011ம் ஆண்டிற்கான அறிக்கையின் 1ஆ பரிந்துரையின் ஒரு பகுதி பின்வருமாறு –

“செயலாளர் நாயகமானவர் உடனே ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும். அதன் ஆணைக்குட்பட்டு பின்வரும் ஒருங்கியல்பான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

i. குற்றம்சாட்டப்பெற்ற உரித்துமீறல்களை எந்தளவுக்கு இலங்கை அரசாங்கமானது உண்மையாக விசாரிக்கின்றது என்பது உள்ளடங்கலாக உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இலங்கை அரசு எப்படி வழிநடத்துகின்றது என்பது பற்றி கண்காணித்து மதிப்பிட்டு காலத்துக்குக் காலம் செயலாளர் நாயகத்திற்கு தமது கண்டுபிடிப்புக்களைத் தெரியப்படுத்த வேண்டும்.

ii. குற்றஞ்சாட்டப்பட்ட உரித்துமீறல்கள் சம்பந்தமாக சுயாதீனமாக விசாரித்தறிவது. அதன் போது நம்பத்தகுந்த மற்றும் நற்பலன் அளிக்கின்ற உள்ளக விசாரணைகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.”

2. பெட்ரீ அறிக்கை எனப்படும் 2012ம் ஆண்டின் “இலங்கையில் நடந்த ஐக்கிய நாடுகள் செயற்பாடுகளின் செயலாளர் நாயகத்தின் உள்ளக மதிப்பீட்டுக் குழாமின்” அறிக்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பல பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதன் செயல் நோக்கம் ஐக்கிய நாடுகள் தான் செய்த தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக்கொள்ளுவதேயாகும். பெட்ரீ அறிக்கையின் 82ஆவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது –

“நடைபெற்ற நிகழ்வுகளைக் கணிப்பதும் அவை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் இலங்கையில் எடுத்த நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதும் குழாமின் ஆணைக்கு அப்பாற்பட்டன. எனினும் ஒன்று தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.

அதாவது நடைபெற்ற கொடூரமான உரிமை மீறல்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமல் அத்துடன் இலங்கையின் பல்வேறு இனங்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினைப் பெறாமல் நிரந்தர சமாதானமும் ஸ்தீரத்தன்மையும் உதயமாகாத.

போருக்குப் பின்னரான மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பொறுப்பினை ஐக்கிய நாடுகள்இலங்கையில் முடிவுறுத்த இவ்வாறான அடிப்படை எதிர்பார்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். எ

னவே பொறுப்புக்கூறலுக்கான நிபுணர்கள் குழாமால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐக்கியநாடுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வர வேண்டும்.”

தமிழ் மக்கள் போலிச் செய்திகளை அடையாளம் காணக்கூடியவர்கள். சுமந்திரன் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் அறிக்கைகளில் கூட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழான முழுமையான விசாரணை நடைபெற்ற பின்னரே சர்வதேச நீதித்துறை செயற்பாடுகளை ஆயத்தப்படுத்த முடியும் என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்ளக பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டா என்றும் இலங்கையின் இராணுவப் பணியாளர்களின் குற்றங்களை மதிப்பீடு செய்ய சர்வதேச நீதித்துறைச் செயற்பாடுகளே பொருத்தம் என்றும் தமிழ் மக்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவேளை எந்தவொரு ஐக்கியநாடுகளின் அலகும் சவேந்திர சில்வாவை எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புபடுத்தவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் அங்கலாய்ப்புக்கு பதில் கூறும் வகையில் மர்சூகி டாருஸ்மானுடன் திரு.சுமந்திரன் அவர்கள் நடத்திக் கொண்ட கலந்துரையாடல்கள் அமைந்ததாகக் கருதலாம்.

சவேந்திர சில்வாவின் பயணத்தடையானது அவருக்குகெதிராக முதல்தோற்ற வழக்கொன்று இருப்பதை ஏற்றே விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முதற்தோற்ற வழங்கானது சர்வதேச உண்மை மற்றும் நீதி சார் செயற்றிட்ட அறிக்கை மற்றும் உண்மையைக் கண்டறியும் தூதுக்குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட வாக்குமூலங்கள் உள்ளடங்கலான பல விசாரணைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதொன்று.

(சில்வா சம்பந்தமான நியமனம் பற்றி மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் செயலகத்தில் இருந்து வெளிவந்த செய்தியில் “ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் சில்வாவும் அவரின் படையணியினரும் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களிலும் மனித இனத்திற்கெதிரான குற்றங்களிலும் ரூடவ்டுபட்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளன). இன்று அவ்வாறான முதற்தோற்ற வழக்குகள் விசாரணைக்காக முன்னிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே திரு.சுமந்திரன் அவர்களின் செவ்விகள் நீதி ரீதியான செயற்பாடுகளில் சான்றாக அமையக்கூடும். ஆனால் அவரின் செவ்வி அறிக்கைகள் சட்ட வலுக்கொண்ட விசாரணையாகா. அவரின் செவ்விகள் பொறுப்புக்கூறலையோ நீதியையோ நிலைநாட்டவில்லை.

இதை இன்னமும் விளக்குவதாக இருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் முக்கியமாகத் தேவையெனினும் ருவண்டாரூபவ் கம்போடியா மற்றும் முன்னைய யூகோஸ்லாவியா போன்றவற்றிற்கான சர்வதேச தீர்ப்பு மன்றம் போன்ற ஒன்றின் முன்னிலையிலேயே மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க உரித்துண்டு.

இலங்கையின் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அதிகம் எதுவும் செய்ய முடியாது என்று தமிழ் மக்களுக்குக் கூறவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்கின்றது.

அவர்களின் இந்த மனப்பாங்கு அக்கட்சியினரின் கையாலாகாத தனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு சர்வதேசரூபவ் சுயாதீன பொறுப்புக் கூறல் பொறிமுறையை அமைக்க முன்வருவதற்கான அக்கட்சியின் தயக்கத்தையும் அதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கிருக்கும் தடுமாற்றத்தையுமே இது எடுத்துக்காட்டுகின்றது.

திரு.சுமந்திரன் உண்மையில் பயப்பிடுவது எதற்காக என்று பார்த்தால் போர்க்குற்றங்கள்ரூபவ் மனித இனத்திற்கெதிரான குற்றங்கள்ரூபவ் இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேசரூபவ் சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான அவாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்பதே.

வடக்கு கிழக்கில் மனித இனப்படுகொலை நடைபெற்றமை பற்றி 2009ன் பின்னர் வடக்கு மாகாணசபையில் ஒரு பிரேரணையை ஏற்றுக்கொள்ள வைத்த துணிச்சல் மிக்க முதலாவது அரசியல் தலைவர் விக்னேஸ்வரன் அவர் தமிழ் மக்களிடையே அவர்களின் அரசியல் ரீதியான முடிவைப்பெற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நீதியரசர் விக்னேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் குற்றம் புரிந்தோர் யாவரும் விசாரணையின் பின் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளார்கள்.

ஆகவே முதற்கண் சர்வதேச சமூகமானது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அலகுகள் ஊடாக சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் குற்றச் செயல்கள் இழைக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியத்தையும் பெற வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கை பொறுப்புக்கூறலுக்குத் தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கும் அவர்களின் மனோநிலைக்கு மருந்தாகவும் தமிழ் மக்களின் வருங்காலத்திற்குரிய அபிலாஷைகளிற்கு அடிப்படையாகவும் அமைவன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.