ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழீழ மக்கள் வெளிநாடுகளில்! ஜெனீவா மாநாட்டில் பகிரங்கப்படுத்திய கிருபாகரன்

Report Print Dias Dias in அரசியல்

எல்லை கடந்த பயங்கரவாதமும், மனித பாதுகாப்பும் என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் மாநாடொன்று நடைபெற்றிருந்தது.

அதில் பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரனும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இந்த மாநாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்புடன் இணைந்து வேறு பல அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்தியிருந்த நிலையில் இதற்கு ஐக்கிய நாடுகளின் ஆபிரிக்க பிரதிநிதியான பிறோ டைய வாரா தலைமை தாங்கியிருந்தார்.

இதில் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், அரச பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இதில் உரையாற்றிய ச.வி.கிருபாகரன், உலகில் அரச பயங்கரவாதத்திற்கு இலங்கை ஓர் நல்ல உதாரணம்.

சாத்வீகத்தை கடைபிடித்து அரசியல் உரிமையை வேண்டி நின்ற தமிழ் மக்களை ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளிய சிங்கள பௌத்த அரசுகள், இறுதியில் தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டத்தை சர்வதேச சமுதாயத்திடம் பயங்கரவாதமாக சித்தரித்து வெற்றி கண்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழீழ மக்களை வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் நிலைக்கு தள்ளி வெற்றி கண்டுள்ளனர் என பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இந்த மாநட்டில் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களான கலாநிதி சாள்ஸ் கிறேவ், பேராசிரியர் நோபேட் சர்வான் மற்றும் பேராசிரியர் வரிக்கோ போன்றோர் பேச்சாளர்களாக பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.