பேருந்து தரிப்பிடத்தை கூட நிர்மாணிக்காதவர்கள் என்ன செய்தோம் என்று கேட்கின்றனர்: மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியுடன் வலுவான அரசாங்கத்தை உருவாக்க பொதுத்தேர்தலில் தன்னால் நிறைவேற்ற வேண்டிய பணிக்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை - பக்கமுன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொலன்னறுவை வைத்தியசாலை பொறியியலாளர்கள் கட்டியது அல்ல. 2010ஆம் ஆண்டு அது துர்நாற்றம் வீசும் இடம்.

நான் சுகாதார அமைச்சராக பதவிக்கு வந்து அந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தேன். பொலன்னறுவை வைத்தியசாலையை திட்டமிட்டது நான்.

சுகாதார அமைச்சராக இருந்த போது அனைத்தையும் பொலன்னறுவைக்கு வழங்கினேன். இப்படி தான் பொலன்னறுவை வைத்தியசாலை உருவானது.

ஒரு பேருந்து தரிப்பிடத்தை கூட நிர்மாணிக்காதவர்கள் நாங்கள் என்ன செய்தோம் என்று கேட்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.