ஐக்கிய தேசிய சக்தியில் இணைந்து செயற்பட ஐ.தே.கவினர் தயங்க அவசியம் இல்லை

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசிய சக்தி என்பது ஐக்கிய தேசியக் கட்சியையும் உள்ளடக்கிய முன்னணியாகும்.

எனவே அதில் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் தயங்க அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஐக்கிய தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாவனல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய சக்தியில் இணைவதால் ஐக்கிய தேசிய கட்சியின் எவரும் தமது உறுப்புரிமையை இழக்கப்போவதில்லை.

ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தமது கட்சியை அமைப்பதற்கு அனுமதியளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.