சஜித் மற்றும் அவரது அணியினருக்கு ஐ.தே.கட்சியின் கதவு திறந்தே இருக்கின்றது: ருவான்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிகார போட்டி ஏற்படுத்துவதன் மூலம் எதிரணிக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கோ அவரது அணியினருக்கோ இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எட்டியாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே தற்போதைய கூட்டணி உருவாக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.