தேர்தல் ஆணைக்குழுவின் கடமைக்காக சுற்றுநிருபம்! கோட்டாபயவின் நடவடிக்கையை கண்டிக்கின்றார் ஹூல்

Report Print Rakesh in அரசியல்

தேர்தல் ஆணைக்குழுவின் கடமை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் சுற்று நிருபம் அனுப்புவது ஆணைக்குழுவின் தரத்தைக் குறைப்பதாகவே கருதப்பட வேண்டியுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச்.ஹூல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிக்கு வழங்கப்படும் வாகனங்களின் விபரங்களைத் தமக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரியிருப்பது தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு அவர் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேர்தல் கடமைக்காக தேவைப்படும் வாகனங்களை அரச திணைக்களங்கள், செயலகங்களில் இருந்து கோரிப்பெறுவது தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

அது ஒரு வழமையான செயற்பாடும் கூட. இம்முறை அவ்வாறான விபரங்களைத் தருமாறு கோருவது ஆணைக்குழுவின் அதிகாரத்தையும், தரத்தையும் குறைப்பதாகவே கருதப்பட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.