வன்னியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி!

Report Print Thileepan Thileepan in அரசியல்

வன்னியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 2 இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது 2019 ம் ஆண்டு வாக்காளர் பதிவுக்கமைய நடைபெறவுள்ளது.

அதற்கமைவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் விகிதாசார தேர்தலின் மூலம் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். இதற்காக ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 9 பேர் வீதம் போட்டியிடுவர்.

இவர்களில் 6 பேரை தெரிவு செய்ய வன்னி தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத்திலிருந்து 88 ஆயிரத்து 842 பேரும், வவுனியா மாவட்டத்திலிருந்து ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 811 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 78 ஆயிரத்து 360 பேருமாக 2 இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளனர்.