ரவி கருணாநாயக்க தப்பிக்க முடியாது! சரத் பொன்சேகா

Report Print Ajith Ajith in அரசியல்

ஒளிந்திருப்பதால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தப்பிக்க முடியாது என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தாம் கைது செய்யப்படாமல் இருக்க ரவி கருணாநாயக்க மறைந்திருப்பதில் எவ்வித காரணங்களும் இல்லை என்று சரத் பொன்சேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலையும் மறைந்திருத்தலையும் ஒரு ஒரே தடவையில் செய்யமுடியாது. எனவே ரவி கருணாநாயக்க வெளியில் வந்து அரசியல் செய்யவேண்டும் அல்லது அரசியலை துறந்து மறைந்திருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது கைது நடவடிக்கை நாடகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ராஜபக்சர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்துரைத்த சரத் பொன்சேகா ரவி கருணாநாயக்க நியந்தனையின்றி தந்தால் மாத்திரம் அன்னம் சின்னத்தை ஐக்கிய தேசிய சக்தி பெற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

இல்லையேல் சஜித் தலைமையிலான கட்சி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.